தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 388 மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 388 மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் வழங்கி உரையாற்றினார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


