தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதியை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட செயலாளர் ராம் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் மழையின் காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் கழிவறைக்குள்ளே மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மாணவ,மாணவியர்கள் அதை பயன்படுத்த இயலவில்லை. இதனால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் வரும்.
கூடிய விரைவில் பொதுத்தேர்வு வரவிருக்கும் நேரத்தில் இது போன்ற உடல் பிரச்சினைகள் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தற்போதைக்கு கழிப்பறை வசதியை செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் வற்றிய பின் மழைநீர் செல்லாதவாறு புதிதாக கழிவறையை உயர்த்தி கட்டிட வேண்டும். பள்ளி வளாகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை துரிதமாக அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


