வரலாறுகளையும், பக்தியையும், பயணத்தினையும் , தொல்லியலையும் எழுதி வந்த நான், சருகு நாவல் மூலம் புதினத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். யாவரும் பப்ளிஷர்ஸ் வழக்கும் விருது பட்டியல் போட்டியில் எனது சருகு நாவலும் இடம் பிடித்து உள்ளது. எங்கள் ஆசான் புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டி 2022&23 குறும்பட்டியலில் எனது சருகு நாவலும் இடம் பெற்றுள்ளது. யாவரும் பப்ளிஷர்ஸ் இந்த அங்கீகாரத்தினை எனக்கு தந்துள்ளனர். வழிகாட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


