தூத்துக்குடியில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு ழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் நகரத் தலைவர் ஏஜே அருள் வளன், அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி, வடக்கு மண்டல தலைவர் சேகர், தெற்கு மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் கோபால், மாநகர மாவட்ட பொது செயலாளர் மைக்கேல் பிரபாகரன், கண்ணன், சேகர், வார்டு தலைவர்கள் வாசி ராஜன், சேவியர் மிஸ்யர், ஜான் வெஸ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.