நாசரேத் திருமறையூரில்பனை ஓலை கலை பொருட்கள் மற்றும் படம் செய்யும் பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறையின் சார்பாக பனை ஓலை கலை பொருட்கள் மற்றும் படம் செய்யும் பயிற்சி முகாம் நாசரேத், திருமறையூரில் நடைபெற் றது. மும்பையை சார்ந்த பனை ஆர்வலர் காட்சன் சாமுவேல் பயிற்சி அளித்தார். பள்ளி மாணவ மாணவிகள், குடும்ப தலைவிகள் என ஏராளமா னோர் பங்கு பெற்றனர்.
ஆரம்பவிழாவில் யோவான் பெண்கள் மேல் நிலைப் பள்ளி தாளாளர் வயோலா மர்காஷியஸ், தலைமை ஆசிரியை ஜூலியட் லார்ட் வின், முக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட இயக்குநர் கோல்டா சாமுவேல், திருமறையூர் சபை ஊழியர் ஸ்டான்லி, பணியாளர் ஆபிரகாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜான் சாமுவேல் பேசுகையில் பனையின் முக்கியத்துவம் , பனை பொருட்களின் அவசியம் போன்றவைகள் குறித்து பேசினார். பயிற்சியில் ஓலைகளைக் கொண்டு உருவங்களைஉருவாக்குதல், படங்கள் உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இயக்குனர்ஜாண்சாமுவேல் செய்திருந்தார்.


