தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 30.06.2025 அன்று 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) மற்றும் சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


