தூத்துக்குடி அரசு மருத்துவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியின் சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங். பிரபல எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரான இவர் 2014ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்றவர். சிவகங்கை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் துணை பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 2019 முதல் இதுவரை 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக எலும்பு முறிவு சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
கொரானா காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்கி வருகிறார்.இது போன்ற அவரது சேவையை பாராட்டி நியூஸ் 7 தொலைக்காட்சியின் சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை செய்தி ஆசிரியர் தியாகச் செம்மல் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிருபர் இசக்கிராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


