இஸ்லாமிய பள்ளிகளில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வதுபோல் திருக்குறளையும் மனப்பாடம் செய்ய ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் சார்பில் நடத்தப்படும் கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டியில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் ஜாமியா பள்ளிவாசல் தலைவருமான மீராசா தலைமை தாங்கினார். ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் MSF ரகுமான், பள்ளியின் தலைவர் சாகுல் சிராஜுதீன், பள்ளிச் செயலாளர் முகமது உவைஸ், ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே எம் காதர் மைதீன், மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
பின்னர் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன், பேசும்போது “தமிழகத்தில் இஸ்லாமிய மாணவர்கள் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வதுபோல் திருக்குறளையும் மனப்பாடம் செய்ய ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு தொகையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை பொருளாளர் இப்ராகிம் மூசா ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநகரத் தலைவர் நவரங் சகாப்தின், இமாம் சதக்கத்துல்லா, சித்திக், பள்ளி பொருளாளர் பீர்முகமது அஷிம், ஜாமியா பள்ளிவாசல் செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், அரபிக் கல்லூரி பொருளாளர் சுலைமான், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் மும்தாஜ் பேகம் வரவேற்று பேசினர் முடிவில் பள்ளி பிஆர்ஓ ஜாபர் சாதிக் நன்றி கூறினார்.


