தூத்துக்குடி மாவட்டத்தில் யூனியன் அலுவலகங்களில் பணியாற்றி வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 10 பேர் பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோன்று உதவியாளர் நிலையில் பணியாற்றி வரும் 7 பேர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.
அதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்2, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்4 சு.பட்டத்தி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்2 ஆகவும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்4 மே.சு.செல்லத்துரை,
கயத்தார் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை), திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்3 கி.இசக்கியம்மாள், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு), ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்1 வே.பொன்னுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்),
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்2 ச.காமாட்சி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை), ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) க.சரசுவதி, ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்4 மி.ஸ்ரீதேவி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்1), பூர்ணமாலா டானியா மச்சோடா,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செ.தங்கசெல்வி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்1) ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பதவி உயர்வு
உடன்குடி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் ஜா.பெலிக்ஸ் பாலநாயகம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்3 ஆகவும், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் ஆர்.சுதாகர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்4, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியாளர் பி.எட்வின்ஜெயதாஸ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்1, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஊர்நல அலுவலர் நிலை1 எஸ்.சின்னத்துரை,
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்4, புதூர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் க.பிச்சை, புதூர் ஊராட்சி ஒன்றியம மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்3, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் உதவியாளர் சி.முத்துநாச்சியார், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்3, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் உதவியாளர் கு.அரிகரன், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்2 ஆகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.


