தூத்துக்குடியில் திமுக, மக்கள் நீதி மய்யம் உட்பட மாற்றுக் கட்சியினர் 100பேர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தூத்துக்குடியில் திமுக 25ஆவது வார்டு வட்டச் செயலாளர் அண்டோ, 25வது வார்டு சார்ந்த திமுக உறுப்பினர்கள் மற்றும் சுமார் மக்கள் நீதி மய்யம் உட்பட மாற்றுக் கட்சியினர் சுமார் 100பேர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


