நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட பிரதான அணைகளில் போதியளவு நீர்இருப்பு இல்லாத காரணத்தினால் ஜுன் 1 -ந் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் தற்போது வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இங்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து கண்ணடியன் கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்படும், இந்த கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து நெல்லை வரை சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர். அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் தற்போது வரை கண்ணடியன் கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
இந்த நிலையில் சேரன்மாதேவியில் கண்ணடியன் கால்வாயில் மிளகு விநாயகர் கோவில் அமைந்துள்ளது, மிளகை அரைத்து இந்த விநாயகர் சிலைக்கு சாத்தியப்பிறகு சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து தண்ணீரை கால்வாய் வடியவிட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம்
சுமார் ஒரு மாத காலம் ஆகியும் தற்போது வரை பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படாததால் மழை வேண்டி இன்று மிளகு விநாயகருக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் மிளகு விநாயகர் சிலைக்கு மிளகு சாத்தப்பட்டு சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால்வாயிலில் தண்ணீரை வடியவிட்டனர்.

இந்த சிறப்பு பூஜையில் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் செய்திருந்தனர்…


