“மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என மாப்பிள்ளையூரணியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
தூத்துக்குடி தமிழக அரசு உத்தரவுபடி மேதினத்தை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் ராம்தாஸ்நகர் தனியார் மஹாலில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிர் கூட்டமைப்பு தலைவர் சமூக ஆர்வலர் என பல்வேறு தரப்பை சார்ந்த ஆண் பெண் என பலர் அப்பகுதியில் குடிதண்ணீர் சாலை வசதி பாலம் பேருந்துநிலையம் நிழற்குடை பட்டா ஆக்கிரமிப்பு மீட்பு காவலர் குடியிருப்பு மின்கட்டண தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு கனிமொழி எம்.பி பேசுகையில் “கிராமங்களில் உள்ளவர்களை அதிகமாக சென்று சந்திக்க வேண்டும். என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திமுகவிற்கு இதுபுதியது அல்ல. எம்பி தேர்தலுக்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தியுள்ளோம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மனுக்களை பெற்றுள்ளோம் அந்த மனுக்கள் மீது தமிழகம் முழுவதும் தீர்வ கண்டதில் தூத்துக்குடி மாவட்ட முதலிடம் பெற்றுள்ளது.
இந்த பகுதி நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். குடிதண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மூன்றரை கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதே போல் 12 கோடி மதிப்பீல் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
அதேபோல் பயணிகள்; பேருந்து நிழற்குடை கேட்டீர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி கட்டி தருவதாக உறுதியளித்துள்ளார். கதர்கிராமத்துறைக்கு உள்ள இடத்தில் விளையாட்டு மைதான் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் இன்னும் ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் “இந்த ஊராட்சிக்கு முதல்வரின் தங்கை வந்துள்ளதால் உங்களுக்கு உள்ள குறைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படுகின்ற பொற்காலமாக அமைந்துள்ளது. அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கனிமொழிக்கு வரும் காலங்களில் அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
ஆட்சியர் செந்தில்ராஜ் பேசுகையில் “ஏற்கனவே கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துக்கொண்டார். நான்கூட இந்த தொகுதியில் வேறு பகுதிக்கு செல்வோம் என்று சொன்னேன். ஆனால் நமது எம்.பி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தான் செல்ல வேண்டும் என்று சரவணக்குமார் மீது உள்ள நம்பிக்கை காரணமாக தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள். இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசு சிறப்பு நிதியை பெற்று செய்து தருவார்கள் என்றார்.
சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் “வருடத்திற்கு நான்கு முறை என்று இருந்த கிராமசபை கூட்டம் முதலமைச்சர் உத்தரவுபடி 6 முறை நடைபெறுகிறது. மக்கள் நலன்தான் முக்கியம் என்று செயல்படும் நாங்கள் அனைத்து குறைகளையும் குறிப்பெடுத்துள்ளோம். அதைமுறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து செய்து தருவோம்” என்றார். கூட்டத்தில் . மாப்பிள்ளையூரணி ஊராட்சியின் வளர்ச்சி குறித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, பயிற்சி கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சப்கலெக்டர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஊராட்சி அலுவலர் சரஸ்வதி, சமூகநலத்துறை அலுவலர் ரதிதேவி, சுகாதார பணிகள் துணைச்செயலாளர் பொற்செல்வன், கால்நடைபாரமரிப்பு துறை மண்டல இணைச்செயலாளர் சஞ்சீவிராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


