தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக திருநெல்வேலி செல்லும்போது, தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் கனிமொழி கருணாநிதி வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.


