தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வாந்து காட்டுவோம் திட்டம் மூலமாக கருங்குளம் ஒன்றியத்தில் வா-ழும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தொழில் செய்ய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது. மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நேரக்கத்தோடு தமிழக அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திடடம் மூலம் தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியத்தில் கடன் வழங்க உள்ளது. அதிகபட்டசமாக 40 இலட்சம் வரை நுண் சிறு குறு தொழில் செய்யும் தனிநபர்கள், தொழில் குழுக்கள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.இந்த திட்டத்திற்கு 21 வயதில் இருந்து 55 வயது வரை மனு செய்யலாம். மகளிர் சுய உதவி குழுவில் 2 வருட உறுப்பினராக இருந்தல் வேண்டும், புதிய தொழில் துவங்க மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றிற்கும் கடன் வழங்கப்படும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இநதியன் வங்கி,பாரதஸ்டேட் வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, பரோடா வங்கி போன்ற வங்கி மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது. இதற்காக கருங்குளம் ஒன்றியத்தில் பொறுப்பளாராக மாரிமுத்து என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை 6383314907 என்ற எண்ணில் தொடர்ப்பு கொண்டு, தாங்கள் தொழில் தொடங்க உள்ள இடம், தொழில் பற்றிய விவரம், ஆதார்கார்டு, பேன் கார்ட், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்யலாம் என கூறியுள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்தினை சேர்ந்த தொழில் முனைவோர் இவரை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என கேட்டுகொள்ள படுகிறார்கள்.


