தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளின் சாவிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஜஸ்வர்யா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவியினை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் வைத்து, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஜஸ்வர்யா வழங்கினார். நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


