பெரியதாழை கடற்கரையில மணல் அரிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லையென புகார் காரணமாக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18ஆம்தேதிகளில் பெய்த கனமழை அனைத்து பகுதியிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.. இதனால் அனைத்து துறை உயர் அதிகாரிகளும், அமைச்சர்கள் பலர் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியதாழை கடற்கரையில் கனமழையால் மணல் அரிப்பு உண்டாகி மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்ல முடியவில்லையெனவும், ஆதலால் மணல் அரிப்பை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து மீனவர்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெரியதாழைக்கு வருகை தந்து பெரியதாழை கடற்கரையில் ஏற்பட்ட மணல் அரிப்பு பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் பெரியதாழையில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய 3தெரு கடற்கரையிலும் மணல் அரிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைத்து கடற்கரையில் படகுகளை நிறுத்தி தொழிலுக்கு செல்லும் வகையில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் கடற்கரையில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து அபாய நிலையில் உள்ளதை சீரமைக்கவேண்டும்.
தூண்டில் வளைவை 200 மீட்டர் தூரம் நீட்டித்து தர வேண்டும் என வலியுறுத்தினர். உடன் அமைச்சர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெரியதாழையில் கூடுதலாக மணல் அடித்து மணல் அரிப்பை சீர் செய்ய வேண்டும் வலியுறுத்தனர்.மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பழுதான மின் கம்பத்தை சீரமைக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர் மீனவர்களிடம் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்ய தெரிவித்துள்ளேன். மணல் அரிப்பை முழுமையாக சரி செய்யப்படும் தூண்டில் வளைவு நீட்டிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பெரியதாழையில் பைக் விபத்தில் காயமடைந்த திமுக கிளை செயலர் மோகன், மேலும் விபத்தில் காயமடைந்த மீனவர் ஜெயந்தன் ஆகியோருக்கு மருத்துவ செல்வுக்கு தலா ரூ 50 ஆயிரம் நிதி உதவி அமைச்சர் வழங்கினார்.
இதில் செயற்பொறியாளர் கணபதிரமேஷ், உதவி செயற்பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் வள்ளி, மாநில வர்த்தக பிரிவு துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி திமுக செயலர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலர் பாலமுருகன், துணை செயலரும், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, தமிழ்நாடு மீனவர் நலவாரிய இயக்குநர் லெனின், ஒன்றிய திமுக மீனவர் பிரிவு செயலர் ரமேஷ், துணை செயலர் ரவி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரனீஷ், ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், முன்னாள் ஒன்றிய துணை செயலர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோசப், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில ஐஎன்டியுசி காங்கிரஸ் செயலர் லூர்துமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மீனவளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


