செய்துங்கநல்லூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என விளம்பர பிரசுரம் செய்யப்பட்டது.
செய்துங்கநல்லூரில் நியாயவிலைக்கடைகள், வியாபார நிறுவங்கள் சூப்பர் மார்கெட், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், டீகடைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், துணி கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் செல் அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட விதி முறைகள் பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன் துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கம் செய்திருந்தது.


