கலியாவூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. பசுமை தமிழ் தலைமுறை தலைவர் சுதன் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கலியாவூர் பரமசிவன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்குமேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். கலியாவூரை சேர்ந்த குட்டி பாண்டியன், பூல் பாண்டியன், செந்தில் முருகன் , கணேசன், அருண், மகராஜன், செல்வம், மாதவன், முருகானந்தம், பரமசிவம், சேதுராமலிங்கம், வீரபாண்டி, மணி, தங்கராஜா , கொம்பையா, சரவணன், மகேஷ்,பசுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பசுமை தமிழ் தலைமுறை இணைந்து செய்திருந்தது.