செய்துங்கநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்டட துணை தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளிமுத்து முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா வரவேற்றார். கருவூல அதிகாரி சிவராமன் சிறப்புரையாற்றினார். தூத்துக்குடியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அனைவரும் கலந்துகொண்டு புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னாள் வாசகர் வட்ட தலைவர் ஜுவா உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.