Hand drawing lorry
ஸ்ரீவைகுண்டம் அருகே அனுமதியின்றி லாரியில் எடுத்துச் சென்ற 3 யூனிட் எம் சாண்ட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (24.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேட்மாநகரம் பத்மநாபமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் மணல் வந்தது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் ஓட்டுநரான ஆத்தூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்த மகாராஜன் மாயாண்டி பிரபு (24) என்பவரை கைது செய்தனர். மேலும். டிப்பர் லாரியும், அதிலிருந்த 3 யூனிட் எம் சாண்ட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


