
கருங்குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பால் பாண்டி. இவர் பனை ஓலையில் பல்வேறு தலைவர்களை முடைந்து வைத்துள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்பட பல்வேறு உருவங்களைப் பனை ஓலையில் முடைந்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அப்துல் கலாம் உருவத்தினை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். அதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.