செய்துங்கநல்லூரில் இன்று காலை 7 மணி முதலே மேக மூட்டம் மிக அதிகமாக இருந்தது. அதன்பின் லேசான தூறலும் மழை துவங்கியது. 11.30 மணி அளவில் திரண்டு வந்த மேகத்தினால், சாலையில் வாகனங்கள் விளக்குடன் செல்லும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வெள்ளம் சாலையில் கரைபுரண்டு ஓடியது. மேலும் கடைக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து சாலையில் வேலை நடந்து வருவதால், ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் இருந்த காரணத்தினால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. கடந்த 17 ந்தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குப் பெய்த மழையைப் போலவே இந்த மழையும் பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அன்றாட வாழ்க்கையில்பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


