வாரிசு அரசியலை அடியோடு அகற்ற
அதிமுகவிற்கு வாக்களியுங்கள்.
செய்துங்கநல்லூரில் அம்மா மினி கிளினிக்
திறப்பு விழா வில் சண்முகநாதன் எம்.எல்.ஏ பேச்சு
செய்துங்கநல்லூரில் முதலமைச்சரின் இலவச அம்மா கிளினிக் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் துணை இயக்குநர் கிருஷ்ண லீலா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெசி மேரி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதன் பின் கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா பெட்டகம் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பேசுகையில்,
ஏழை எளிய மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட அறிவிக்கப்பட்டது தான் இந்த பொங்கல் பரிசு. வேறு யாரு முதல்வரானாலும் இது போல் நல்ல பல திட்டங்கள் கிடைக்காது. மற்ற கட்சியினர் தனது குடும்பத்தை மட்டுமே காப்பாற்றுவார்கள். நமது அதிமுக கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுக கட்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதல்வராகி உள்ளார். அவர்களின் அரசியல் வாரிசு யாருக்கும் வாய்ப்பு கிடையாது. அதிமுக கட்சியில் யார் வேண்டுமானாலும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் கட்சி இது. தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை தந்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சி நீடித்திட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும். எனவே அதிமுகவிற்கு வாக்களியுங்கள். என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், செய்துங்கநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் பார்வதிநாதன், சமூக சேவகர் சுடலை, பஞ்சாயத்து கிளார்க சங்கரபாண்டியன், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் முருகையா பாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட இளம்பெண் பாசறை சுப்பிரமணியன், அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் கோதர், சின்னத்துரை, சுடலைமுத்து, கருங்குளம் மருத்துவ அலுவலர் ஆயிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர் சண்முகபெருமாள், சமுதாய நல செவிலியர் சாந்தகுமாரி, கிராம சுகாதார செவிலியர்கள் விவேகானந்த விஜயா, மைதிலி, சுஜாதா, மெர்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
&&&