
வல்லநாடு அருகே உள்ள நாணல்காட்டில் பிரதிஷ்டை செய்யபப்பட்ட இடைக்காடர் சித்தர் மண்டல பூஜை நிறைவு பெற்றது.
திருநாமகாடு என்று அழைக்கப்படும் நாணல்காடு திருகண்டிஸ்வரர் சிவகாமி அம்மாள் கோயில் மேல்புறம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சமயபுரம் பச்சை வேஷ்டி சாமியால் ஏட்டு கணபதி, இடைக்காட்டு சித்தர், கூர்மை விளக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் 48வது நாள் மண்டல பூஜையட்டி கடந்த 14ந் தேதி பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது அதன்பின் 17 ந்தேதி காலை பால் குடம், தீர்த்த குடம், பன்னீர் குடம், 28 வகையான தீர்த்த குடங்கள் எடுக்கப்பட்டது. பால்குடம் அதிகாலை தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஊர் வலம் வந்து ஏட்டு கணபதி, இடைகாட்டு சித்தர், கூர்மை விளக்கு ஆகியவைக்கு அபிசேகம் செய்யபப்பட்டது. அதன் பின் சிவன்கோயிலில் சிவனுக்கு, அன்னை உள்பட பரிவார தேவதைகளுக்கு அபிசேகம் செய்யப்பபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் பச்சைவேட்டி சுவாமி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.