தாமிரபரணி பாசன வடிநிலக் கோட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் 800க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாச வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் ஆழ்வார்திருநகரியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.


