விளாத்திகுளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
நகர்ப் புறங்களில் உள்ள மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் மூலம் தீர்வுகாணும் வகையில்‘மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்புத் திட்ட முகாமை தமிழக அரசு, நடத்தி வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகாம் இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முகாமை துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாச்சியர் பாஸ்கரன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், மருத்துவர் ராஜசேகரன், உதவி பொறியாளர் செல்வகுமார், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


