1976 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூரில் பிறந்தவர்.
தந்தை திரு. எஸ். தர்மராஜ், தாய் திருமதி த. செல்லத்தாய். இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
கணவர் திரு. பால்ராஜ்; மகன் மிராக்ளின், மகள் ஜெனி ரோஸ்.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் டோனாவூரில் அமைந்துள்ள உவாக்கர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சுற்றுச்சூழல், கல்வி, வரலாற்று ஆய்வு, பெண்ணியம், தன்முனைப்பு போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை சார்ந்த உரைகள் வழங்கும் பேச்சாளராகவும், நெல்லை பொருநை இலக்கிய விழாக்கள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளில் வாசிப்பை ஊக்குவிக்கும் சிறப்பு பேச்சாளராகவும் பங்கேற்று வருகிறார்.
வரலாறு, பண்பாடு மற்றும் சமூக விழிப்புணர்வு துறைகளில் பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
1.டோனாவூர் நட்சத்திரங்கள் (வரலாற்று ஆய்வு),
2.மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு),
3.அனைவருக்கும் இலட்சியம் (மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நூல்),
4.தேவதாசிமுறை எதிர்ப்பில் ஏமிகார்மைக்கேல்,
5.குயில்கள்,
6.ஆணின் அழகும் ஆளுமையும் (பெண்ணியம்),
7.வரலாற்றில் டோனாவூர்,
8.புனித பேதுரு ஆலய வரலாறு உள்ளிட்ட நூல்கள்
வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
புரட்சிப்புயல் ஏமிகார்மைக்கேல், மற்றும் ஓடிப்போனவன் ஆகிய வரலாற்று நாவல்கள் வரலாற்றுச் சுவடுகள் மாத இதழில் தொடராக வெளிவந்து வருகின்றன.
சுற்றுச்சூழல், வரலாறு, பெண்ணியம் மற்றும் தன்முனைப்பு சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் தி இந்து திசை, வரலாற்றுச் சுவடுகள், விடியல், உங்கள் நூலகம், காக்கைச் சிறகினிலே, தளம், காடு, உயிர் உள்ளிட்ட முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களில் வெளிவந்துள்ளன. குறிப்பாக தி இந்து திசை நாளேட்டின் உயிர்மூச்சு இணைப்பிதழில் சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றன.
பெண்ணியம் மற்றும் சூழலியல் எழுத்துகளுக்காக பெருமைமிகுப் பெண், செங்கால் நாரை, கால்டுவெல் நினைவு விருது, Women Empower, சக்தி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்


