முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் மிகவும் பழமையானது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமாக இருந்த இந்த கோயில் 400 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அழிந்து விட்டது. அப்போது ஆண்ட சிற்றரசன் வீரபாண்டியன் புதிதாக கோயிலை கட்டி அதற்குள் பிரமாண்டமான சிவன், சிவகாமிஅம்மாள், பைரவர் சிலையை வைத்து விட்டான். இந்த கோயில் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமான முக்குறுணி அரிசி பிள்ளையார், லெட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. தென்னகத்தில் தனிச்சன்னதியில் லெட்சுமி நரசிம்மர் கோயில் உள்ள சில இடங்களில் முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மரும் ஒருவர். தற்போது பக்தர்கள் ஏற்பாடின் பெயரில் லெட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாமி பூஜை நடந்து வருகிறது. பக்தர்கள் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடந்துவருகிறது.
இந்த கோயிலில் பிரதோஷம் விழா மிகச்சிறப்பாக நடந்தது. இதற்காக சிவன், சிவகாமியம்மாள், நந்தி ,பைரவர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் வள்ளிநாதன் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் செய்திருந்தார்


