முத்தாலங்குறிச்சி நல்லபிள்ளைபெற்ற குணவதி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது.
இதையொட்டி முதல் நாள் குடியழைப்பு நடந்தது. இரண்டாம் நாள் காலை தாமிரபரணி ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டது. அதன் பின் அம்மன் கரகம் எடுத்து மணக்கரை, முத்தாலங்குறிச்சி, பொந்தன்பொழி ஆகிய கிராமங்களில் சுற்றி வந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. இரவு அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்தார். அதன்பின் மதுகுடம் பொங்குதல் என அற்புத நிகழ்வு நடந்தது.
மூன்றாம் நாள் காலை 7 மணிக்கு அம்மன் சப்பரம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அதன்பின் படைப்பு எடுக்கப்பட்டு திருவிழா முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


