தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
கனமழையினால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதியில் அதிகமான வெள்ளநீர் தெருக்களிலும், வீடுகளிலும், பஜார் கடை முழுவதும் வெள்ளம் புகுந்ததால் அனைத்து பீரோ, கட்டில் மற்றும் துணிமணிகள் உட்பட அனைத்து உடைமைகளையும் வெள்ளநீர் அடித்து சென்றது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அடைந்து பொருட்சேதங்கள் ஏற்பட்டதால் பலரும் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் வகையில் மதர் சமூக சேவை நிறுவனம் அதிகமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். தற்போது அதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
அதிலும் மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய, மக்களுக்கள் கூலி வேலைக்கு கூட சொல்ல முடியாமல் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில், உண்ண உணவின்றி மிகுந்த சிரமப்பட்டு வருவதை அறிந்து. அப்பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில் மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து பாதிக்கப்பட்ட பகுதிளுக்கு மதர் சமூக சேவை நிறுவனத்தினர் நேரடியாக சென்றனர். அப்போது உடன்குடி ஒன்றியம், செம்மறி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பூலிகுடியிருப்பு கிராமத்தில் மழை வெள்ளத்தில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1000 மதிப்புள்ள போர்வை, துண்டு, அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினார்.
இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, சமூக ஆர்வலர் கல்விளை அருள்ராஜ் உட்பட பல கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


