நெல்லை ஜமீன்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு
நூல் விமர்சனம் நூல்வேண்டுவோர் 8760970002
திரு காமராஜ் அவர்களுக்கு
என் பெயர் V.Sridhar (Retired General Manager from Union Bank of India)
உங்களுடைய நெல்லை ஜமீன்கள் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்
முதலில் ஆனந்த விகடன் ஆடியோ புத்தகத்தில் கேட்டபோது, ஆரம்பத்திலேயே ஊர்காடு ஜமீனைப் பற்றி வந்ததால், மிகுந்த ஆவலுடன், புத்தகத்தை கிண்டிலில் தரமிறக்கிப் படித்தேன்
என்னுடைய ஊர் அம்பாசமுத்திரம் – வசிப்பது சென்னையில்
சிறுவயதில், ஊர்காடு ஜமீன் இருந்த இடத்திற்குப் போயிருக்கிறோம் – அங்கிருந்த பாழடைந்த வீட்டில் இருந்த வெள்ளை டைல்ஸ்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன் – அது டைல்ஸ் இல்லாத காலம்
படித்தது தீர்த்தபதி ஸ்கூலில் என்பதால், சிங்கம்பட்டியாரைப் பற்றி, முழுவதுமாக தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
ஒவ்வொரு ஜமீனைப் பற்றியும் விலாவாரியாக, படிக்கும் வகையில் எழுதியிருந்தது அருமை – ஒரு நாவலுக்குரிய எல்லா அம்சங்களும் இந்த புத்தகத்தில் இருக்கிறது
எட்டையபுரம் ஜமீன் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்தது
அம்பை போகும்போது, கண்டிப்பாக, சில ஜமீன் வாழ்ந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருந்தது உங்கள் எழுத்து
ஊரில் உள்ள நண்பர்களுக்கு, இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்திருக்கிறேன்
All the Best for all your future endeavour
Regards
V.Sridhar
9663319632
Thanks ayya – Muthalankurichi Kamarasu


