ஸ்ரீவைகுண்டத்தில் படுமாேசமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் சித்திரைவேல் தலைமையில் பாஜகவினர் துாத்துக்குடி மாவட்டஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், “ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளிலும், சாலை மிகவும் மோசமாக உள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது தலமான கள்ளர்பிரான் சுவாமி கோவிலுக்கு செல்லும் நான்கு ரத வீதிகளிலுள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
5 வது வார்டில் தெருவிளக்குகள் 3 மாதமாக எரியவில்லை. அங்கு துப்புரவு பணிகளும் சரியாக நடக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


