செய்துங்கநல்லூர் அருகே தேர்வில் பெயிலானதால் விஷம் குடித்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி விஎம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பேச்சிலட்சுமி (15), பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆண்டு இறுதித் தேர்வில் அவர் தோல்வி அடைந்துவிட்டாராம். இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதையடுத்த கருங்களும் மாதவன் கோவில் தெருவில் உள்ள பாட்டில் வீட்டிற்கு வந்திருந்த அவர் நேற்று விஷம் குடித்துள்ளார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் மாலதி அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


