இன்று மதியம் ஸ்ரீவைகுண்டம் வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தாமிரபரணியில் நடைபெற உள்ள மகா புஷ்கர திருவிழாவிற்கு தாமிரபரணியில் உள்ள படித்துறைகள் அனைத்தையும் விரைவில் சீரமைக்க மாநில அரசு தான் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு பார்வைக்கு தான் கொண்டு செல்லத்தான் இயலும். தென்பகுதியில் நதிகளை தூய்மை செய்ய இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 கோடி ரூபாய் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை அதற்கான முதற்கட்ட பணிகள் கூட ஆரம்பிக்கவில்லை. முதலில் 800 கோடிக்கான பணிகள் நடைபெறட்டும் அதன்பின்னர் தாமிரபரணி ஆற்றில் தடுப்பனை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


