கடந்த 33 ஆண்டுகளாக இவர் தமிழகம் , ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூலை முடுக்குகள் எல்லாம் சென்று பல்வேறு கோவில்களுக்கு தனது குழுவினருடன் சென்று ( இலவசமாக) உழவாரப் பணிகள் செய்து வருகிறார். சிதிலமடைந்த பல கோவில்களை புணரமைத்திருக்கிறார்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நதிக்கரைகள் , நீர் நிலைப்பகுதிகளில் ஏராளமான மரங்களையும் நட்டு வைத்தவர்
திருநெல்வேலியின் ஜீவநாடியான தாமிரபரணி நதி அழிவை நோக்கி சென்று கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தி அதை மீட்டெடுக்கும் முயற்சியில் நம் தாமிரபரணி என்ற அமைப்பை உருவாக்கினார் .
பல்வேறு அரசு மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் நதிக்கரைகளை சீர்படுத்தி தாமிரபரணிக்கு புத்துயிர் கொடுத்தவர்.
ஓசைப்படாமல் அவர் செய்து வரும் இந்த சாதனையை பாராட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடத்த விழாவில் *கவர்னர் ஆர் என்.ரவி* அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் காசோலையுடன் கூடிய பசுமை அமைதி காதலன் என்ற விருது வழங்கி கௌரவித்தார்


