திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா, குடியரசு நாள் உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக வியாழக்கிழமை முதலே பக்தா்கள் குவிந்து வந்தனா். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.


