செய்துங்கநல்லூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கேரள பாதிப்பு நிவாரணம் பிரிக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை கடையாக சென்று நிவாரண பொருள்கள் சேகரித்தனர். அரிசி. உடை, காய்கறி, பணம் உள்பட அத்தியவாசியமான பொருட்களை சேகரிக்கும் பணி நடந்தது.
சங்க தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். செயலாளர் பிச்சை பூபாலராயர் முன்னிலை வகித்தார். பொருளாளர் பால்சாமி, சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் பணங்களை முறையாக கேரளாவுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.


