சாத்தூர் இன்னர்வீல் கிளப் சார்பில் சகோதரிசுப்புலெட்சுமி தீபன் மஞ்சுநாதன் மற்றும் அவரது நண்பர்கள் செயலாளர் நித்தியா சுதாகர், இன்னர் வீல் கிளப் ஆப் சாத்தூர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராஜேஷ் உள்பட உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்., சாத்தூர் வைப்பாற்றில் உள்ள முள்செடிகளைப் பிடுங்கி, அந்நகரை ஒரு முன்மாதிரி நகராக மாற்ற வேண்டும் என ஆவலுற்றனர். இதற்காக, நண்பர் இருக்கன்குடி கணேஷ் மூலமாக என்னைத்தொடர்பு கொண்டனர். அவரது மாமனார் திரு. ஜெயச்சந்திரன் அய்யா மூலமாக, திருநெல்வேலியில் எக்ஸ்னோரா (Exnora) நிறுவனத் தலைவர் திரு. செந்தூர்பாரி மற்றும் என்னைச் சந்தித்தனர்.
அதன் பின் இதுகுறித்துப்பேச, நாங்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. சுப. புத்திரா ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்திக்க அவரது அலுவலகம் சென்றோம். அவர் இதற்குமுன் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகப் (Commissioner) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியில் சாக்கடை கலக்காத நதியாக அதை மாற்ற அடிக்கோலிட்டவர்; அதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டிவிட்டுச் சென்றவர். அவரிடம் நாங்கள், “சாத்தூர் வைப்பாற்றைச் சுத்தம் செய்கிறோம்” என்று கூறியவுடன், மிகுந்த ஆவலோடு அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது என்னுடன் எங்கள் ஊரிலிருந்து தம்பி ஹரி தாமோதரன், சிஷ்யன் காமராசு செல்வன் மற்றும் சடகோபால் ஆகியோர் உடன் வந்திருந்தனர். விரைவில் சாத்தூர் வைப்பாற்றில் உள்ள முள்செடிகள், இன்னர்வீல் கிளப் மற்றும் மக்கள் பங்களிப்புடன் அகற்றப்படும்.
இதற்கான நல்வாய்ப்பைத் தந்த இன்னர்வீல் கிளப்பிற்கும், அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவதாகக் கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சுப. புத்திரா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், உடன் வந்தவர்களுக்கும், அய்யா ஜெயச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி!
– அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


