எட்டயபுரம் அருகே தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோட்டில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் மாட்டுத் தீவனம் ஏற்றிக்கொண்டு, ஈரோடு மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியைச் சோ்ந்த அசோக் பரத்வாஜ் (40) என்பவா் ஓட்டிச் சென்றாா். நேற்று காலை எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகில் இருந்த பாலத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் முன்பக்க பாகங்கள் மற்றும் டயா்கள் கழன்று ஆங்காங்கே சிதறின. மேலும், பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. லாரி ஓட்டுநா் கீழே குதித்ததால், அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தாா். எட்டயபுரம் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீா் செய்தனா். விபத்து குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


