நெல்லையில் உழவர்ப் பணிக்குழு ஆர்வலருக்கு கவர்னர் ரவி 26 ஆம் தேதி விருது வழங்குகிறார்.
பாலை வி எம் சத்திரம் விஸ்வ ரத்னா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். வயது 70. இவர் இந்திய விமானப்படை எல்ஐசியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், உழவாரப்பணி குழுவில் இவர் உள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக கோயில்களில் உழவாரப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கோயில்கள் குளங்கள் கிணறுகள் தாமிரபரணி நதி தீர்த்தக்கட்டங்களில் உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார் குளங்கரைகள் நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டு உள்ளார் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கர்நாடகாவில் இவர் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். நம் தாமிரபரணி அமைப்பில் இவரது பங்கு முக்கியமானது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பசுமை அமைதி காதலன் என்ற விருதை சென்னை கவர்னர் மாளிகையில் 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் கவர்னர் ரவி வழங்குகிறார்.
இதுகுறித்து முத்துக்கிருஷ்ணன் கூறிய போது இந்த விருது எனக்கு ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் மற்றவர்களுக்கும் வழிகாட்டுதல் கிடைக்கும் சோழ நாட்டு கோயில்கள் நீர் நிலைகளை சீரமைத்தால் தமிழகம் வளம் பெறும் என்றார்


