ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து கழக பணிமனை டயர்களுக்கு பட்டன் போடும் பணியின் போது வெளியாகும் புகையாலும், கரித்துண்டுகளாலும் பொது மக்கள் அவதி. தொடர் அலட்சியத்தால் நோய் பரவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டயர்களுக்கு பட்டன் போடும் பணியின் பொழுது வெளியாகும் புகையாலும் கரித்துண்டுகளாலும் பொது மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு அளாகி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 34 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் சேதமடைந்த காணப்படும் டயர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிமணை வளாகத்தின் ஒரு பகுதியில் அடுக்கி வைத்து இருந்தனர்.
இதனால் மழைக்காலங்களில் டயர்களில் தண்ணீர் தேங்கியதால் கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். பலமுறை டயர்களை அப்புறப்படுத்த கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் டயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கு தாசில்தார் தாமஸ் அருள் பயஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பழுடைந்த டயர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
தற்போது ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டயர்களுக்கு பட்டன் போடும் பணியின் பொழுது வெளியாகும் புகையால் பொதுமக்கள் பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும், அருகில் உள்ள வீடுகளில் குடிதண்ணீரிலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இப்பணிமனை அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் பணிமனையில் நடைபெறும் டயர்களுக்கு பட்டன் போடும் பணியின் பொழுது எழும் கரும்புகை குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறது. சிறு, சிறு துண்டு டயர்களும் சிதறி தெருக்களை அசுத்தப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருளிடம் கேட்ட போது, டயர்கள் மற்றும் கழிவு பொருட்களை அகற்ற நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இப்பணிகளை வேறு இடத்தில் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.