தாமிரபரணி ஆற்றின் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணையின் நேரடிப் பாசனமாகவும் குளத்துப் பாசனமாவும் 46ஆயிரத்து107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிப் பெறுகின்றன. கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்படியும் சப்&கலெக்டர் பிரசாந்த் ஆலோசனையின் பேரிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்பொழுது வரையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சுமார் 44ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீமூலக்கரையில் உள்ள குத்தாளங்குறிச்சி மானாவாரி குளத்தில் சுமார் 3.5ஏக்கர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ் உள்ளிட்ட வருவாய் துறையினர் அகற்றினர்.
குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களாகவே அகற்றும்படி அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, வருவாய் துறையினரே அகற்றுவதுடன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.