ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என வலிலியுறுத்தி நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர், மாணவிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலிலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதே கோரிக்கையை வலிலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை (ஏப்.5) கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.