வருடம் தோறும் மார்கழி மற்றும் தை மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து ஏராளமான ஊரைச் சேர்ந்த பக்தர்களும், அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நடைபயணமாக திருச்செந்தூருக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் ஆடிப்பாடி வாகனத்தில் செல்வார்கள்.
அதே போல் இந்த வருடமும் முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு நடந்து செல்கின்றனர். இவர்கள் இரவில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் இரவில் மின்னும் ஸ்டிக்கரை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலையம் முன்பு ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சகாயஜோஸ் துவக்கி வைத்தார். அவருடன் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் சோமன்ராஜன் மற்றும் போலிசார் பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினர்.