தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது ஏரல் பேரூராட்சி. இங்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் தனசிங்.
இவர் ஏரல் வாரச்சந்தையை முறையாக ஏலம் விடாமலும், பத்திரம், பட்டா உள்ள நபர்களுக்கு கட்டிடம் அனுமதி வழங்காமலும், அலுவலகத்திற்கு முறையாக வராமல் இருப்பது உள்பட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி இன்று பேரூராட்சி நிர்வாக அதிகாரியை கண்டித்து ஏரல் காந்தி சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிஜேபியை சேர்ந்த கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


