ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கேம்பலாபாத்தைச் சேர்ந்தவர்கள்கள் செய்யது அலி(26) மற்றும் குத்புதின்(28). செய்யது அலிக்கு வருகின்ற 25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இருவரும் அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி பஜாருக்கு பைக்கில் வந்து திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தனியார் பேருந்து நிற்காமல் சென்று விட்டது. இதில் செய்யது அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்கள் குத்புதின் ஆபத்தான நிலையில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலிசார் விசாரனை நடத்தி நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை தேடி வருகின்றனர்.