அரசைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜெயசீலன்துரை தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் இசைசங்கர், ஸ்ரீவைகுண்டம் தொகுதித் தலைவர் வர்கீஸ், வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, முன்னாள் நகரத் தலைவர் சித்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ்மோடியை கைது செய்ய வலிலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
இதில், பேரவை பொதுச் செயலர் ஹைதர் அலிலி, வட்டாரத் தலைவர்கள் திருச்செந்தூர் சற்குரு, ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் வட்டார துணைத் தலைவர் முத்துகுமார், மூத்த நிர்வாகி முருகன், மரியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.