
விட்டிலாபுரத்தில் சாலை பாதுகாப்பு முகாம் நடந்தது. நாட்டார்குளம் ஆர்.சி. பங்கு தந்தை இருதய சாமி தலைமை வகித்தார். எம்.எம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார், நாட்டார்குளம் ஆர்.சி. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விட்டிலாபுரம் பஞ்சாயத்து கிளார்க் பூலு பாண்டியன், சப்இன்ஸ்பெக்டர் முத்து ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நன்றி கூறினார்.