ஜம்மு: காஷ்மீரில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இருந்து தனியார் வாகனம் மூலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் உதம்பூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 6 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது