ரயில் சுரங்க பாதையால் துண்டிக்கப்பட்ட கிளாக்குளம் கிராம மக்கள் பிரச்சனை தீர்க்க பழைய மங்கம்மாள் சாலை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் – பேய்குளம் சாலைம மிக முக்கியமானது. இந்த சாலை தாதன்குளம், கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம், புதுக்குளம், வசவப்பனேரி, தேர்க்கன் குளம், பழனியப்ப புரம் வழியாக செல்கிறது. இந்த சாலையில் மினி பஸ் சென்றுவருகிறது. இதற்கிடையில் தாதன்குளம் அருகே நெல்லை – திருச்செந்தூர் இருப்பு பாதையில் ஆள் இல்லா ரயில்வே கேட்டில் சுரங்க பாதை அமைக்க பணி துவங்கியது. இந்த பணியில் எதிர்பாரத விதமாக ஊற்று அதிகமாக ஏற்பட்ட காரணத்தினால் சுமார் 10 அடிக்கு தண்ணீர் பெருகி நிற்கிறது. அதை மோட்டார் வைத்து இறைத்தும் நீர் வற்றவில்லை. இதற்கிடையில் வேலையை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் அருகில் உள்ள ரயில் பாலத்துக்கு கீழ் வழியாக சென்று கொண்டிருந்தது. தற்போது மழை பெய்த காரணத்தினால் அந்த பாதையிலும் செல்ல முடியவில்லை. இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி தான் மக்கள் வெளியேற முடிகிறது. இங்கு வந்து சென்ற மினி பேருந்தும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே கிளாக்குளம் தீவு போல மாறி விட்டது. அதே வேளையில் இந்த ஊருக்கு மங்கம்மாள் சாலை என்றவொரு சாலை உண்டு.
இந்த சாலை கருங்குளம் – மூலைக்கரைப்பட்டி சாலையில் மண்புழு கம்பேனி வழியாக கிளாக்குளம் வரும் வழியில் வரைபடம் உள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து கால்வாய் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் இந்த சாலை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இந்த சாலையை அய்யனார்குளம் பட்டியில் இருந்து தாதன்குளம் வரை தார் சாலையாக மாற்றி விட்டனர். அதன் பிறகு கிளாக்குளம் வழியாக கால்வாய் கிராமத்துக்கு இந்த சாலை வரைபடத்தில் உள்ளது. ஆனால் தூர்ந்து கிடக்கிறது.
இதுகுறித்து கிளாக்குளத்தினை சேர்ந்த கண்ணன் என்பவர் கூறும் போது தற்போது வேறுபாதை இல்லாமல் இந்த மங்கம்மாள் சாலையை தற்காலிக சாலையாக பயன்படுத்தி வாகனங்களை ஓட்டிச்செல்கிறோம். இந்த சாலை மழை பெய்தால் செல்ல இயலவில்லை. எனவே இந்த சாலையை தார்சாலையாக மாற்றி நிரந்தர தீர்வு செய்து தரவேண்டும் என அவர் கூறினார்.
எனவே இந்த சாலையை செம்மை படுத்தி த £ர் சாலையாக மாற்றி தரவேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.